தனிப்பட்ட காரணத்திற்காகவே பசில் அமெரிக்க சென்றுள்ளார்; அமைச்சர் நாமல் ராஜபக்ச விளக்கம்

Updated in 2021-May-14 10:51 AM

விளக்கம் அளித்த அமைச்சர்... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தனது தனிப்பட்ட காரணத்துக்காகவே திடீரென அமெரிக்கா சென்றதாகவும் மருத்துவ சிகிச்சை பெறும் அளவுக்கு அவருக்கு எவ்வித வருத்தமும் இல்லையெனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பசிலின் அமெரிக்க விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் நாமலிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் அமெரிக்கா சென்றது தனிப்பட்ட காரணத்துக்காகவே. இது வழமையானது. அவர் மூன்று வாரங்களில் நாடு திரும்புவார். அவர் சிகிச்சை பெறும் அளவுக்கு அவருக்கு எவ்வித வருத்தமும் இல்லை.

தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். எனவே இதில் நாங்கள் தலையிடுவது பொருத்தமாக இருக்காது என நான் நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.