முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கி செல்லக்கூடாது

Updated in 2021-May-14 10:55 AM

சிறப்பு சுற்றறிக்கை... முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கிக் கொண்டு செல்வதை இனியும் தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நபர்களை தூக்கிச் செல்லும் போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் அதிகாரிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கைது செய்யப்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மற்றொரு குழுவும் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனிமேல், முகக்கவசம் இல்லாத நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டக்கூடாது என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.