கிா்கிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது 

Updated in 2021-May-16 02:02 AM

மத்திய ஆசிய நாடான கிா்கிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,249-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினா்.

தொடா்ந்து, ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1,695-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கிா்கிஸ்தானில் 93,302 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 5,252 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 85 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.