மாத இறுதி வாரத்தில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு?

Updated in 2021-May-16 04:22 AM

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படலாம்... இம்மாதத்தின் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26,27ஆம் திகதிகள் வெசாக் நாட்களாக காணப்படுகின்றன. தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்த நிலையில் வெசாக் வாரத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து கொரோனா அச்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த வாரம் முழுவதிலும் பயணத்தடையை விதிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.