கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 713 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated in 2021-Jun-22 03:17 AM

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் 713பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கபபட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23வது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து எட்டாயிரத்து 836பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 26ஆயிரத்து 076பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 11ஆயிரத்து 760பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.