பெண் ஒருவர் துஸ் பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பூங்காவிற்கு சீல்

Updated in 2021-Jun-23 10:10 AM

பூங்காவிற்கு சீல்... லண்டனில் பிராட்ஃபேட் நகரில் உள்ள சிறுவர்கள் விளையாடும் பூங்கா ஒன்றில் வைத்து, பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர் .

இந்த சம்பவம் நேற்றைய தினம் (22ம் தேதி) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து முழு பூங்காவையும் சீல் வைத்து மூடிய பொலிசார், தடயவியல் நிபுனர்களை அழைத்து, தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
 
அத்துடன் சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்க தக்க ஒரு இளைஞரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை கடந்த சில மாதங்களாக லண்டனில் குற்றச் செயல்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.