போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

Updated in 2021-Jun-24 02:42 AM

முதலமைச்சர் உத்தரவு... சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ தாக்குதலில் உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

ஏத்தாப்பூர் போலீசாரின் வாகன சோதனையின் போது நிகழ்ந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டு உள்ள முதலமைச்சர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இடையப்பட்டி முருகேசன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். முருகேசனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் சிறப்பு சிறப்பு காவல் எஸ்.ஐ பெரியசாமி பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.