கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாகி விட்டது; உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

Updated in 2021-Jun-24 02:45 AM

தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது... தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலை பரவியதற்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் கொரோனா 2-ஆம் அலை உருவானதற்கு காரணமாக தேர்தல் அமைந்தது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டால் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டனர்.