மின்தடைக்கு என்ன காரணம்; அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

Updated in 2021-Jun-24 02:49 AM

மின்தடைக்கு காரணம்... தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக தான் மின் தடை இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்திலேயே சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றார்.

இது அதிமுக ஆட்சியில் 2ஆயிரம் மெகா வாட் என்ற அளவுக்கு குறைந்ததாகவும் அமைச்சர் கூறினார். திமுக ஆட்சியில் மின் தடையை போக்க குறுகிய கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, யூனிட் மின்சரம் 9ரூபாய்க்கு தனியாரிடம் கொள்முதல் செய்யததாகவும், ஆகையால் தான் மின்சார துறையில் நடந்த குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.