வரும் 1ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு

Updated in 2021-Jun-24 03:00 AM

வரும் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு... விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 முதல் சென்னையில் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 65-வது படம்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாகப் படப்பிடிப்பு நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் திரைப்படப் படப்பிடிப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மீண்டும் தொடரவுள்ளது. ஜூலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.